Blogging Guide in Tamil

FORMER AND THREE CROOKS

Farmer and three crooks

-விவசாயியும் மூன்று திருடர்களும்-ஒரு ஊருல ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு,அவரு நிறைய ஆடு மாடுகளை வளர்த்துக்கிட்டு வந்தாரு




நல்லா வளர்ந்ததுக்கு அப்புறமா ஆடுகளையும் ,மாடுகளையும் பக்கத்துக்கு ஊர் சந்தைக்கு கொண்டுபோயி வித்து அந்த பணத்துல தனக்கு தேவையான உணவு பொருட்கள வாங்கிட்டு வர்றது அவரோட வழக்கம்

ஒருநாள் ஒரு ஆட்டு குட்டிய தன்னோட கழுத்துல போட்டுக்கிட்டு காட்டு வழியா பக்கத்து ஊரு சந்தைக்கு நடந்து போனாரு அவரு

அவரு போறத மூணு திருடர்கள் பார்த்தாங்க ,உடனே அவர அடிச்சு போட்டுட்டு அந்த ஆட்டு குட்டிய திருடலாம்னு முடிவு பண்ணுனாங்க


அப்பத்தான் அதுல இருந்த ஒரு புத்திசாலி திருடன் சொன்னான் ,அந்த விவசாயி கடினமா வேலை செஞ்சு திடகாத்திரமா இருக்காரு நாம அந்த விவசாயிய அடிக்க முடியாது

அதனால நான் சொல்லுறபடி செய்யலாம்னு சொல்லி ஒரு யோசனையை சொன்னாரு உடனே ஒரு திருடன் மெதுவா அந்த விவசாயி பக்கத்துல நடந்து போனான்


டக்குனு அடடா இது என்ன ஓநாயை கழுத்துல போட்டுட்டு போறிங்கனு கேட்டுட்டு ,அந்த ஓநாய் கடிச்சிட போகுதுனு சொல்லிட்டு உயிருக்கு பயந்து போடுராமாதிரி ஓடிப்போனான்


விவசாயிக்கு ஒரே குழப்பம் இருந்தாலும் மேலும் நடக்க ஆரம்பிச்சாரு ,அப்ப இன்னொரு திருடன் அங்க வந்தான் அடடா இரு என்ன நரிக்குட்டிய கழுத்துல தூக்கிட்டு போறிங்கனு சொல்லிட்டு அவனும் ஓடிப்போற மாதிரி நடிச்சான்

அப்பத்தான் தன்னோட கழுத்துல இருக்குறது உரு மாறுற ஏதோ பிராணி போல ,தனக்கு ஆடுமாதிரியும் ,ஒருத்தனுக்கு ஓநாய் மாறியும் ,இன்னொருத்தனுக்கு நரி மாதிரியும் தெரியாதோன்னு ஒரு சந்தேகம் வந்துச்சு


அப்பத்தான் மூணாவது திருடன் விவசாயி முன்னாடி வந்து அடடா இது என்ன கழுதை புலியா கழுத்துல தூக்கிட்டு போறிங்கனு சொல்லிட்டு கத்தி கிட்டே ஓடுனாண் ,


ஏற்கனவே சந்தேகதுல குழப்பமான மனசோட இருந்த விவசாயி இப்ப முழுமையா பயந்து அந்த ஆட்ட அங்கேயே போட்டுட்டு வீட்டுக்கு ஓடி போயிட்டாரு



இத எல்லாம் மறைஞ்சிருந்து பாத்த திருடர்கள் வந்து அந்த ஆட்ட திருடிட்டு போய்டாங்க
How is it? 😇


Comments

Anonymous said…
Wow supper story 😍
Anonymous said…
Nice story....🥰
Keep it up gopal....😇
Next story I am waiting....
Anonymous said…
😘❤️
Anonymous said…
Nice story
Anonymous said…
Super v good
Anonymous said…
Nice